ரஷ்யாவில் தங்கி இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் நடவடிக்கை தொடங்கியது இருந்து பெரும்பாலான உலக நாடுகளுடனான தொடர்பை இழந்து ரஷ்யா தனிமையடைந்து வருகிறது.
மேலும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகள் மற்றும் பயணத்தடைகள் விதித்துள்ளனர்.
இதற்கிடையில், டென்மார்க்கிற்கு அருகிலுள்ள நோர்ட் ஸ்ட்ரீம் (Nord Stream) 1 மற்றும் நோர்ட் ஸ்ட்ரீம் 2-ல் இருந்து மர்மமான மூன்று கசிவுகள் நீருக்கடியில் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்பு பதிவு செய்யப்பட்டது.
இந்த வெடிப்புக்கு ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் திட்டமிட்ட செயல் என்று குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவில் தங்கி இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு முன்னதாக பல்கேரியா, போலந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகள் தங்கள் குடிமக்களை ரஷ்யாவில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.