ரஷ்யாவில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 10,669 பேருக்கு தொற்று உறுதி!

  • Post author:
You are currently viewing ரஷ்யாவில் கொரோனா ; கடந்த 24 மணி நேரத்தில் 10,669 பேருக்கு தொற்று உறுதி!

உலகை அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் ரஷ்ய நாட்டில் ஆரம்ப காலகட்டத்தில் கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாகக் கடந்த ஆறு நாட்களில் அந்நாட்டில் புதிதாக 60,000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,669 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6வது நாளாக அங்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,87,859 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இதுவரை அங்கு 1,723 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றில் இருந்து 26,608 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள