உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக 100 பிரித்தானிய கூலிப்படைகள் களமிறங்கியுள்ளதாக பட்டியல் ஒன்றை ரஷ்ய ஆதரவு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரஷ்ய ஆதரவு சமூக ஊடகமான குழு ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், 99 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் என மொத்தம் 100 பேர் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், தனியார் கூலிப்படையை சேர்ந்த மொத்தம் 700 பேர்கள் உக்ரைனில் களமிறக்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் 5ம் திகதி தாங்கள் குறிப்பிட்டுள்ளதாகவும், தற்போது அவர்களின் பெயர்கள், பிறந்த திகதி உள்ளிட்ட தகவல்களை வெளியிடுகிறோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, குறித்த தகவலை உக்ரைன் மாகாண ஆளுநர் ஒருவரின் அலுவலகத்தில் இருந்தே திரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் குறித்த தகவலின் உண்மைத் தன்மை இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றே தெரியவந்துள்ளது.
இதனிடையே, உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புகளால் சிறை பிடிக்கப்பட்ட பிரித்தானிய வீரர்கள் இருவரின் பெயர்கள் குறித்த கூலிப்படைகள் பட்டியலில் இடம்பெறவில்லை என்றே தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, தனியார் கூலிப்படைகளை களமிறக்க உக்ரைனில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யாவே தனியார் கூலிப்படைகளை களமிறக்கியிருந்தது. அதில் 3,000 பேர்கள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.