ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு சரிவை சந்தித்த பேஸ்புக் !

You are currently viewing ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவு சரிவை சந்தித்த பேஸ்புக் !

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் பாரிய சரிவை கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேஸ்புக் பின்னர் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என முன்னணி சமூக வலைதளங்களை உள்ளடக்கி சமூக வலைதளங்களின் ஜாம்பவனாக உருவெடுத்தது.

கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்பட்டது. 18 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த பேஸ்புக் முதன்முறையாக கடந்த பெப்ரவரி மாதம் தனது பயனாளர்களை இழக்கத் தொடங்கியது.

இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்திக்கத் தொடங்கின. கடந்த ஜூலை மாதம் 350 டொலருக்கும் மேல் வர்த்தகமான பேஸ்புக்கின் ஒரு பங்கின் விலை தற்போது 200 டொலர் அளவிற்கு குறைந்துள்ளது.

இதன் காரணமாக உலகின் மூன்றாவது பணக்காரராக இருந்த பேஸ்புக் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க்(Mark Zuckerberg) தற்போது 12-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி கடந்த ஜூலை மாதம், மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 142 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.

ஆனால் தற்போது அவரின் சொத்து மதிப்பு பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளும் சுமார் 50 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

பேஸ்புக்கின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமான காரணம், அந்நிறுவனம் பயனாளர்களை இழக்கத் தொடங்கியது.

199 கோடியாக இருந்த ஆக்டிவ் யூசர்ஸ் எனப்படும் பேஸ்புக்கின் தினசரி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 192 கோடியாக சரிந்துள்ளது.

இதனால், சுமார் 75 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கை வெளியான பின்பு கடந்த பெப்ரவரி மாதம் பேஸ்புக்கின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 220 பில்லியன் டொலர் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது. 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments