ரஷ்யாவுக்கு மேலும் ஒரு எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்!

You are currently viewing ரஷ்யாவுக்கு மேலும் ஒரு எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன்!

உக்ரைன் தொடர்பில் ரஷ்யாவின் போக்கு நம்பும்படியாக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும் எனில் நாங்கள் அதை வேடிக்கை பார்க்க மாட்டோம் என குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், கடுமையான நடவடிக்கைகளுக்கும் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் நேரடி மோதலுக்கு நாங்கள் தயாரில்லை என குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், உக்ரைனில் அமெரிக்க மக்களை ரஷ்யா குறிவைக்கும் எனில் விளைவுகள் கடுமையாக இருக்கும் என ஜோ பைடன் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவும் நேடோ நாடுகளும் ரஷ்யாவுக்கு எப்போதும் அச்சுறுத்தலாக இல்லை என குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைனில் ஏவுகணைகளும் நிலை நிறுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, அப்படியான திட்டமும் எங்களுக்கு இல்லை எனவும் ஜோ பைடன் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்ய மக்களுக்கு எதிரான நடவடிக்கை ஏதும் அமெரிக்கா தரப்பில் இருந்து முன்னெடுக்கப்படாது என குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், ரஷ்யாவை சீர்குலைக்கும் எண்ணமும் தங்களுக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீங்கள் எங்கள் எதிரி அல்ல, உக்ரைனுக்கு எதிரான இரத்தக்களரி போரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் நம்பவில்லை என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments