ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புதல் அளித்துள்ளது.
அண்டை நாடான ரஷ்யா, நேட்டோ அமைப்பில் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முதல் உக்ரைன் மீது சரமாரியாக குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசி வருகிறது. உக்ரைனில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்தியா, பிரிட்டன் உள்ளிட்ட பல வெளிநாட்டினர் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர்.
வான், கடல் மற்றும் தரைவழியாக நடத்தப்பட்ட மும்முனைத் தாக்குதலில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதற்கிடையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அதிகாரத்தை கைப்பற்ற உக்ரைன் ராணுவத்திற்கு அழைப்பு விடுத்தார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனுடனான ரஷ்யாவின் போரை அடுத்து இரு ஐரோப்பிய நாடுகளின் சொத்துக்களை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
ரஷ்யா உக்ரைனின் மீதான போரைத் தொடுக்கின்றது. அதற்கான விளைவுகளையும் தண்டணைகளையும் ரஷ்யாவிற்கு வழங்குவோம்.
போரை நிறுத்தவிட்டால் அதற்கான பதிலடியை நாம் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் கொடுப்போம் என நேற்றைய தினம் ஐ.நா. வின் பாதுகாப்புச் சபையில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் (Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
இராஜதந்திரப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் (Vladimir Putin) போரைத் தொடர்ந்தால் நாங்களும் போரையே தெரிவு செய்வோம். அதற்கான விளைவுகளை விளாதிமிர் புதின் சந்திப்பார்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர், ஐரோப்பாவின் அமைதி மற்றும் பாதுகாப்பைச் சீர்குலைக்கும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் பாதுகாப்புச் சபையில் எச்சரித்துள்ளார்.