ரஷ்யா பங்கேற்றால் 40 நாடுகள் புறக்கணிக்கும்: போலந்து !

You are currently viewing ரஷ்யா பங்கேற்றால் 40 நாடுகள் புறக்கணிக்கும்: போலந்து !

பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்றால் 40 நாடுகள் புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அடுத்த ஆண்டு சூன் 26ஆம் திகதி 33வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளதால், அந்நாட்டு அரசு பிரம்மாண்டமான முறையில் போட்டிகளை நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மற்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்றால் பாரிஸ் ஒலிம்பிக்கை புறக்கணிப்போம் என உக்ரைன் கூறியது.

உக்ரைனைத் தொடர்ந்து தற்போது அதேபோன்ற ஒரு அறிவிப்பை போலந்து வெளியிட்டுள்ளது. அதாவது, பாரிஸ் ஒலிம்பிக் போட்டியை பிரித்தானியா, அமெரிக்கா, கனடா உட்பட 40 நாடுகள் ஒன்றிணைந்து புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு நடக்க வாய்ப்புள்ளது. நாம் ஒன்றிணைந்து புறக்கணிக்கும் போது, பாரிஸ் ஒலிம்பிக்கில் முக்கியத்துவம் குறைந்துவிடும் என போலந்து விளையாட்டுத்துறை அமைச்சர் கமில் போட்னிக்சுக் தெரிவித்துள்ளார்.

போலந்தைப் போல லிதுவேனியா, லாத்வியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்யா, பெலாரஸ் வீரர்கள் பங்கேற்றால் மற்ற நாட்டு வீரர்கள் நெருக்கடிக்கு உள்ளாவார்கள். இரு நாட்டு வீரர்களையும் களத்தில் நேருக்கு நேர் சந்திக்க நேரிடும். அத்துடன் உக்ரைன் மீதான போரை திசை திருப்பும் விதமாக இந்த விளையாட்டு பயன்படுத்தப்படும்’ என தெரிவித்தன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply