ரஷ்யா மீது  தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம் !

You are currently viewing ரஷ்யா மீது  தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம் !

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது மேலும் அதிரடித் தடைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

ரஷ்யா மீதான ஐரோப்பாவின் அடுத்த கட்ட தடைகள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெற்றுக்கொள்வதனை முழுமையாக தடை செய்யவும், போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக தடை விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிற்கான பாதிப்புக்களை வரையறுத்துக் கொள்ளவும், ரஷ்யாவின் மீது அதி உச்ச அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் புதிய தடைகள் அமையப்பெறும் என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வொன் டிர் லெயன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் பெற்றுக் கொள்வதனை முற்றாக தடை செய்யும் திட்டத்திற்கு ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

மரியாபோல் மற்றும் புச்சா ஆகிய நகரங்களில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக கடுமையான தடைகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply