ரஷ்ய எல்லையில் ஜப்பான்-அமெரிக்கா திடீர் ராணுவ கூட்டு பயிற்சி!

You are currently viewing ரஷ்ய எல்லையில் ஜப்பான்-அமெரிக்கா திடீர் ராணுவ கூட்டு பயிற்சி!

தனது எல்லைக்கு அருகில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகள் ராணுவ பயிற்சியை தொடங்கியதற்கு ரஷ்யா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்க துருப்புகளுடன் ஜப்பான் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சிகளை தொடங்கிய நிலையில், புதன்கிழமையன்று மாஸ்கோவில் உள்ள ஜப்பான் தூதரகத்திற்கு ரஷ்ய அரசாங்கம் எச்சரிக்கை குறிப்புகள் வழங்கியுள்ளது. அதில் தனது எல்லைக்கு அருகில் நீண்ட தூர பீரங்கி அமைப்புகளான HIMARS ஐப் பயன்படுத்துவதை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது.

மேலும் இந்த இராணுவ பயிற்சிகளை தூர கிழக்கில் ஏற்படும் பாதுகாப்பு சவாலாக கருதுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் ரஷ்ய எல்லைக்கு அருகில் HIMARS சோதனையை உடனடியாக நிறுத்துமாறு ஜப்பானை வலியுறுத்தியது, அவ்வாறு அவை நிறுத்தப்படவில்லை என்றால் அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளது.

இந்நிலையில் ஜப்பான் வெளியுறவு அமைச்சகம் HIMARS ஆயுதம் பயிற்சியின் போது பயன்படுத்தப்படாது என உறுதியளித்துள்ளது.

உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை தொடர்ந்து ரஷ்யா தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply