ரஷ்ய தாக்குதலுக்கு 10,000கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர மேயர் பகீர் தகவல்!

You are currently viewing ரஷ்ய தாக்குதலுக்கு 10,000கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர மேயர் பகீர் தகவல்!

உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய தாக்குதலுக்கு 10,000கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர மேயர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கை 40 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது. மேலும், கிழக்கு உக்ரைனை கைப்பற்றும் நோக்கில் தற்போது இராணுவத்தை குவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், துறைமுக நகரமான மரியுபோல் மேயர் வெளியிட்ட தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மரியுபோல் நகரில் மட்டும் 10,000 பேர்களுக்கு மேல் கொல்லப்பட்டுள்ளதாகவும், மொத்தம் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 20,000 கடந்திருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புகள் தகனம் செய்வதற்கான மொபைல் உபகரணங்களுடன் புகுந்ததாகவும், அதனாலையே சடலங்களை கைப்பற்ற முடியாமல் போனதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் மனிதாபிமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்க ரஷ்ய துருப்புகள் அனுமதிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ரஷ்ய துருப்புகள் பல உடல்களை அப்பகுதியில் உள்ள பெரிய வணிக வளாகம் ஒன்றிற்கு கொண்டு சென்றதாகவும்,

அங்கு சேமிப்பு கிடங்கு வசதிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள் உள்ளன எனவும், பின்னர் மொபைல் தகன வாகனங்களில் அவை எரியூட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யப் படைகள் நகரைச் சுற்றி வளைத்ததில் இருந்து, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் இன்னும் மரியுபோலில் சிக்கியுள்ளனர். மட்டுமின்றி, சுமார் 120,000 குடிமக்கள் உணவு, தண்ணீர் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் இன்றி தவிக்கின்றனர் எனவும் மரியுபோல் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply