ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படு கொலை தொடர்பான ‘OKL’ திரைப்படத்தின் முதற் பார்வை இன்று வெளியிடப்பட உள்ளது.
ராஜபக்சக்களின் கொடுங்கோலாட்சியில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்காவின் கொலை தொடர்பாக இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் ‘Operation Kill Lasantha’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார்.
லசந்த படுகொலை செய்யப்பட்டு 13வது ஆண்டு நினைவு நாளாகிய (ஜன-08) இன்றைய தினம் குறித்த திரைப்படத்தின் முதற்பார்வை வெளியிட்டு வைக்கப்பட உள்ளது.
புதுடெல்லி ஊடக மன்றத்தில் வெளியீடு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டெல்லி உள்ளிட்ட இந்தியாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவல் காரணமாக இணையவழி ஊடாக வெளியீடு இடம்பெற உள்ளதாக படத்தின் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய, இலங்கை நேரம் இன்று (ஜன-08) பி.பகல் 4.00 மணிக்கு (ஐரோப்பிய நேரம் மு.பகல் 11.30 மணி, கனடா – ரொரன்டோ நேரம் அதிகாலை 5.30 மணி, இங்கிலாந்து – லண்டன் நேரம் மு. பகல் 10.30 மணி) இணைய வழியூடாக (ZOOM) வெளியிட்டு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அருவிக்கு அவர் மேலும் தெரிவித்தார்.
Meeting ID : 837 2685 7629
Passcode : 744753