லண்டனில் சாதனை படைத்த தமிழ் பெண்!

You are currently viewing லண்டனில் சாதனை படைத்த தமிழ் பெண்!

லண்டன் தமிழச்சி’ என்ற பிரபல யூட்யூப் சேனலை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார் சுபி சார்ல்ஸ்.

விதவிதமான உணவு வகைகள், பிரமாண்ட லண்டன் வீதிகள், அங்குள்ள குக்கிராமங்கள், தன் வாழ்க்கை அனுபவங்கள், வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பற்றின விவரங்கள், தன்னம்பிக்கை பேச்சுகள் என பல்வேறு விஷயங்கள் குறித்து, இவர் பதிவிடும் வீடியோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் பல ஆயிரக்கணக்கில் குவிகின்றன.

இவரது இயல்பான தமிழ் பேச்சும், நகைச்சுவையும், அரை மணி நேர வீடியோவைக்கூட, அலுப்பு இல்லாமல் பார்க்க வைக்கிறது என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.

லண்டனில் சாதனை படைத்த தமிழ் பெண்! 1

“என்னுடைய முதல் வீடியோவில், சற்றே நாகரிகமாக பேசவேண்டும் என்று மிகவும் கவனமாக இருந்தேன். பல்லை கடித்து கொண்டு, என்னுடைய வட்டாரத்தில் பேசும் தமிழ் வந்துவிடக்கூடாது என்று கவனமாக பேசியிருப்பேன். ஆனால், அது இயல்பாக இல்லை என்று எனக்கே தோன்றியது. அதனால், சரி, நாம் பேசும் பாணியிலேயே பேசி பார்க்கலாம் என்று முயற்சி செய்தேன். அதுதான், என் அடையாளமாக மாறியது”, என்று கூறுகிறார் சுபி.

2018 ஆம் ஆண்டு இவர் தனது யூட்யூப் சேனலை தொடங்கினாலும், முதன்முறையாக 2019ஆம் ஆண்டு இவரது வீடியோ ஒன்று வைரலானது. “பொதுவாக, எனக்கும் என் கணவருக்கும் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். பலதரப்பட்ட மக்களையும், அவர்களின் கலாச்சாரத்தையும் அறிந்து கொள்வதில் எங்களுக்கு ஆர்வம் அதிகம். அப்படி ஒருமுறை, இங்கிலாந்தில் ஒரு குக்கிராமத்துக்கு பயணம் சென்றோம். அந்த அனுபவங்களை பதிவு செய்தோம்.

லண்டனில் சாதனை படைத்த தமிழ் பெண்! 2

அந்த வீடியோவை பகிர்ந்து, ஒரு வருடம் கழித்து, 2019 ஆம் ஆண்டு திடீரென வைரலானது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், கூடவே பெரும் பயமும் வந்துவிட்டது. இனி எப்படி இந்த சேனலை நடத்துவது, எப்படி நான் கண்டு ரசிக்கும் விஷயங்களை சொல்ல வேண்டும் என்று பல சிந்தனைகள். ஆனால், நான் திட்டமிட்டு வீடியோ பதிவு செய்தது மிகவும் குறைவே. இயல்பாக ஒன்றை செய்யும்போதுதான், மக்களிடம் சென்றடைக்கிறது,” என்று விவரிக்கிறார் சுபி.

‘லண்டன் தமிழச்சி’ என்ற பெயருக்கான காரணம் பற்றி விளக்கம் அளித்த சுபி . “முதலில், சுபி கார்னர் அல்லது சுபி கிச்சன் என்று பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன். ஆனால், லண்டனில் எங்கு சென்றாலும், நான் வேறு நாட்டைச் சேர்ந்தவள் என்பதை தெரிந்துக்கொள்வார்கள். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்; தமிழ் என்ற அடையாளம்தான் எனக்கு சொந்தமானது. அப்படிதான், இந்த பெயரில் யூடியூப் தொடங்கினேன்,” என்று  கூறுகிறார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply