லண்டன் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

You are currently viewing லண்டன் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை!

லண்டனில் உள்ள ஒரு சரங்க ரயில் நிலையம் அருகே பதுங்கியிருக்கும், மூன்று பாலியல் தாக்குதல்களுக்குப் பின்னால் இருப்பதாகக் கருதப்படும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர். லண்டனில், டோலிஸ் ஹில் ஸ்டேஷனுக்கு அருகில் தொடர்ச்சியாக 3 வார இறுதிகளில் பாலியல் தாக்குதல்கள் நடந்துள்ளன. இவற்றுக்கு இடையில் தொடர்பு இருப்பதாகவும், மூன்று சம்பவங்களையும் ஒரே ஆள் நிகழ்த்தி இருக்கலாம் என்றும் பொலிஸார் கருதுகின்றனர்.

முதல் சம்பவம், ஆகஸ்ட் 28-ஆம் திகதி இரவு 11.25 மணியளவில் நடந்தது. அதில் ப்ரெண்டின் ஃப்ளீட்வுட் சாலையில் 30 வயது பெண்ணை பின்தொடர்ந்து ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதிலிருந்து 8 நாட்களுக்குப் பிறகு, செப்டம்பர் 5-ஆம் திகதி, அருகில் உள்ள எல்லெஸ்மியர் சாலையில் 21 வயது பெண் ஒருவர் இரவு 10 மணிக்குப் பிறகு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 11-ஆம் திகதி இரவு 10.15 மணிக்கு, எல்லெஸ்மியர் சாலையில் மற்றொரு 21 வயது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அப்போது ஒரு வழிப்போக்கன் உள்ளே நுழைந்தவுடன் சந்தேக நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரும் குற்றவாளி ஒரு கலப்பு இனத்தவர் என்றும், மெல்லிய உடலமைப்பு, கட்டையான முகம் மற்றும் கருப்பு நிற ஆடை அணிந்தவர் என்று விவரித்துள்ளனர்.

இது குறித்து, இந்த வழக்குகளின் விசாரணைக்கு தலைமை வகிக்கும் அதிகாரி, துப்பறியும் ஆய்வாளர் ஜானி நியூவெல் கூறுகையில், குற்றவாளி தனது தாக்குதல்களைச் செய்வதற்கு முன்பு ஒரு ஒதுங்கிய பகுதிக்கு பெண்களைப் பின்தொடர்வதாக கூறினார். மேலும் அவரது நோக்கம் ஒன்று தான் என்பது தெளிவாகிறது என்கிறார்.

இந்நிலையில், இந்தப் பகுதியில் வசிக்கும் எவரும் இந்த மாலைகளில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான எதையும் பார்த்திருக்கிறார்களா என்பதைப் பற்றி சிந்திக்கவும், அவர்களிடம் உள்ள சிசிடிவி அல்லது கதவு மணி காட்சிகளைச் சரிபார்க்கவும் பொலிஸாரால் வலியுறுத்தபட்டுள்ளனர்.

மேலும், இந்த பாலியல் தாக்குதல்கள் மிகவும் அரிதாகவே உள்ளன, ஆனால் அடுத்த சில வாரங்களில் நாங்கள் அந்த பகுதியில் கூடுதல் ரோந்துப் பணிகளை மேற்கொள்வோம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருப்பினும், லண்டன் வாசிகளுக்கு இதுகுறித்து எச்சரிப்பதாகவும், பதுங்கி இருக்கும் குற்றவாளியை வலைவீசி தேடிவருவதாகவும், விரைவில் அவர் கைது செய்வதை உறுதிசெய்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply