வடகிழக்கில் பரவலாக தமிழின அழிப்பு நினைவுகள்!

You are currently viewing வடகிழக்கில் பரவலாக தமிழின அழிப்பு நினைவுகள்!

தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் 5 ஆம் நாளான நேற்று யாழ்ப்பாண குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளும், கஞ்சி வழங்கலும் இடம்பெற்றுள்ளன.

மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் 5 ஆம் நாளான நேற்று வேலணை – புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.

தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பட்டில் புளியங்கூடல் சந்தியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் நேற்று இரவு 7.00 மணியளவில் முள்ளிவாய்க்காலின் வலிகளை இறுதிவரை அனுபவித்தவரும் மாவீரரது சகோதரனுமான சண்முகலிங்கம் அகஷ்கரன் அவர்களால் ஈகச்சுடர் ஏற்றபட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது.

2009 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் மக்கள் எதிர்கொண்ட பட்டினி மற்றும் மனிதாபிமான அவலங்களும் நினைவுகூரப்பட்டதுடன், திடலில் நாட்டிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீபங்கள் கூடி நின்ற மக்களால் ஏற்றப்பட்டதுடன் அழிப்பின் அடையாள சின்னமான படத்திற்கும் மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது

அத்துடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் நினைவுகூரலில் கலந்து அஞ்சலித்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் 5ஆம் நாளான இன்று யாழ்.தென்மராட்சி வரணிப்பிரதேசத்தில் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும் காய்ச்சி வழங்கப்பட்டது.

அந்தவகையில் வரணி மக்களால் ஏற்பாட்டில் வரணி மத்தியகல்லூரி முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு நினைவுக்கஞ்சியும் பரிமாறப்பட்டது.

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு அம்மன் பகுதியிலும் பிரதேச இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வாழங்கும் நிகழ்வும் நடத்தப்பட்டுள்ளது. அம்பன் கொட்டோடை சந்தியில் இடம் பெற்ற நிகழ்வில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை குடத்தனை வட்டார பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் அகஸ்டின் ஆசிரியர் பொது ஈகை சுடரை ஏற்றி வைத்தார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கிழக்கு செம்பியன்பற்று வடக்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கல் நிகழ்வும் நேற்றுக் காலை 9:30 மணியளவில் செம்பியன்பற்று தேவாலயம் முன்பாக உணர்வு ரீதியாக இடம்பெற்றது குறித்த நிகழ்வின் ஆரம்பத்தில் செம்பியன் பற்று பங்கு தந்தை யாஸ்டின் ஆதர் அவர்களால் விசேட வழிபாடு ஒன்று வழங்கப்பட்டது பின்னர் ஊடகவியலாளர் லின்ரன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது

நிகழ்வில் இறுதிப்போரில் தனது தந்தையையும் மகனையும் இழந்த குடும்பஸ்தர் ஒருவரால் பொது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதிப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கும் உறவுகளுக்காகவும்அகவணக்கம் செலுத்தப்பட்டது தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து தமிழின படுகொலையை ஞாபகப்படுத்தும் முகமாக உப்பு கஞ்சி வழங்கப்பபட்டது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், கைதடி முச்சக்கர வண்டி சங்கமும் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும், கஞ்சி வழங்கும் நிகழ்வும் யாழ்.கைதடி சந்தியில் நேற்று இடம் பெற்றது. இந்த நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் இ.யோகேஸ்வரன், பிரதேச சபை உறுப்பினர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேபோன்று

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் சனிக்கிழமை (16) காலை 8.30 மணியளவில் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தி கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply