வடக்கில் அநியாயமாக பறிபோயுள்ள தமிழ் உயிர்கள்!

You are currently viewing வடக்கில் அநியாயமாக பறிபோயுள்ள தமிழ் உயிர்கள்!

வவுனியாவில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

வவுனியா – தரணிக்குளம், குறிசுட்ட குளம் நீரேந்து பகுதியில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவரின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ஈச்சங்குளம் பொலிஸார் நேற்று  (18.11.2023) தெரிவித்துள்ளனர்.

தரணிக்குளம் குறிசுட்ட குளத்தின் நீரேந்து பகுதியில் நீரில் மிதந்த நிலையில் அழுகிய நிலையில் காணப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக அப் பகுதி மக்களால் கடந்த (14.11.2023) ஆம் திகதி ஈச்சங்குளம் சிறீலங்கா காவற்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இரண்டு கைகளும், ஒரு காலும் இல்லாத நிலையில் உருக்குலைந்த நிலையில் பொலிஸாரால் பார்வையிடப்பட்டு மீட்கப்பட்டது.

குறித்த சடலம் தொடர்பில், யுவதிகள் காணாமல் போனமை தொடர்பில் வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்த நான்கிற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ள போதும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது குறித்த விசாரணைகளை தடவியல் பொலிஸாரின் உதவியுடன் ஈச்சங்குளம் சிறீலங்கா காவற்துறையினர் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் பற்றைக்குள் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் உள்ள பற்றைக்குள் இருந்து  நேற்றைய  தினம்( 18)ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொன்னாலை சந்திக்கு சமீபமாக வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் வீதியில் உள்ள பற்றைக்குள்ளேயே சடலம் இனங்காணப்பட்டுள்ளது.

சடலம் அடையாளம் காண முடியாதளவிற்கு பழுதடைந்துள்ள நிலையில் சடலம் தொடர்பாக வட்டுக்கோட்டை சிறீலங்கா  காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் முதியவர் அடித்து கொலை

யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவரொருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(18.11.2023) இரவு இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்காகிய முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

உணவகம் ஒன்றில் பணியாற்றும் உரும்பிராய் தெற்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் பிறேமராசன் என்ற 66 வயதான முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவகம் ஒன்றில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கான காரணம் என தெரியவரும் நிலையில் அதே பகுதியை வாய் பேச இயலாத சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கோப்பாய் சிறீலங்கா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை நடந்த இடத்தில் யாழ். நீதவான் ஏ.ஆனந்தராஜா இன்று (19)பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பாக தடயவியல் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்று அதிகாலை (18 -11-2023) சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் தனிமையில் இருந்த குறித்த இளைஞர் இன்று அதிகாலை தூட்கிட்டு உயிரிழந்துள்ளார்
காலை சகோதரி வீட்டுக்கு சென்று பார்த்தபோது தூக்கிட்டு உயிரிழந்தநிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்
31 வயதான சந்திரசேகரம் காஜனன்
என்ற இளைஞரே தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார்.
இந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments