வட மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட்19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – 15, கிளிநொச்சி – 05, முல்லைத்தீவு – 07, வவுனியா – 20 மற்றும் மன்னாரில் – 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுகாதார துறை தொழிற்சங்கங்களில் வேலை நிறுத்தம் காணமாக கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் மிகக் குறைந்தளவான பி.சி.ஆர். பரிசோதனைகளே முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் நாடு முழுவதும் நேற்று 934 தொற்று நோயாளர்களே உறுதிப்படுத்தபட்டதாகவும் கோவிட்19பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.