வடக்கில் 1600 முன்பள்ளிகளில் ஒரே நாளில் சத்துணவு திட்டம்!- உலக வங்கி அனுசரணை

You are currently viewing வடக்கில் 1600 முன்பள்ளிகளில் ஒரே நாளில் சத்துணவு திட்டம்!- உலக வங்கி அனுசரணை

வட மாகாணத்தில் உள்ள சுமார் 1600 முன்பள்ளிகளில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை தொடக்கம் மூன்று மாத காலத்திற்கு இலவச சத்துணவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை யாழ். பகுதியில் அமைந்துள்ள முன்பள்ளி ஒன்றில் இதற்கான செயல் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முன்பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பேரும் நோக்குடன் சத்தான உணவை வழங்கும் நோக்குடன் வடமாகாண த்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட முன்பள்ளில் குறித்த திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

உலக வங்கியின் நிதி அனுசரணையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகம் உள்ளூராட்சி அமைச்சு, வட மாகாண கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து குறித்த செயற் திட்டத்தினை வழி நடத்துகின்றது.

குறித்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை வடமகாண பிரதம செயலாளர் ஆரம்பித்து வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் வருகை தரவில்லை.

இன் நிலையில் பிரதம செயலாளர் அலுவலக பிரதிநிதி நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் ஜெலீபன் நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வடமாகாண ஆரம்ப பிரிவு உதவி கல்விப் பணிப்பாளர் சற்குண ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

வடக்கில் 1600 முன்பள்ளிகளில் ஒரே நாளில் சத்துணவு திட்டம்!- உலக வங்கி அனுசரணை 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments