வட்டுக்கோட்டையில் உயிரிழந்த நபர்-காரணம் என்ன?

You are currently viewing வட்டுக்கோட்டையில் உயிரிழந்த நபர்-காரணம் என்ன?

யாழ்.வட்டுக்கோட்டை பகுதியில் உயிருக்கு போராடிய நோயாளி ஒருவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு நோயாளர் காவு வண்டி தாமதித்ததால் நோயாளி உயிரிழந்துள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ஊரடங்கு நடைமுறையில் இருந்த வேளையில் வட்டுக்கோட்டை பிரதேசத்தினைச் சேர்ந்த சிறுநீரகம் செயலிழந்த நோயாளியை நோயாளர் காவு வண்டியில் அழைத்துவருவதில் தாமதம் ஏற்பட்டதில் அனாவசியமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் நாங்கள் விரிவான விசாரணையினை மேற்கொண்டிருந்தோம்.

எனவே மக்களுக்கு வேண்டுகோள், இவ்வாறான நிலை ஏற்படுமாக இருந்தால் 1990 என்ற இலக்கத்துக்கு அழைத்து நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு செல்லலாம்.அந்த இலக்தின் மூலம் உடனடியான தொடர்பினை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால்,0212226666 அல்லது 0212217982 என்ற இலக்கங்களின் துணையுடன் அழைத்து யாழ்.மருத்துவ பீடத்தினரின் துணையுடன் நோயாளர்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டையில் உயிரிழந்த நபர்-காரணம் என்ன? 1
பகிர்ந்துகொள்ள