வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு 6 இலட்சத்து ஓராயிரம் ரூபா காசோலை வழங்கி வைக்கப்பட்டது. சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர் ஊடாக கனடா சித்தங்கேணி ஒன்றியத்தினர் இந்த நிதி உதவியினை வழங்கினர். வைத்தியசாலையில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த உதவித் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ரதினி காந்தநேசன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளையினர், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் நோயாளர் நலன்புரி சங்கத்தினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)