கடந்த வாரம், ஒஸ்லோ நகரில் வசிக்கும் வதிவிடமற்ற ருமேனியர்களில் பலர் கொரோனா தொற்றின் விளைவாக ருமேனியாவுக்கு திரும்ப விரும்புவதாக ஒஸ்லோ நகராட்சி கூறியுள்ளது.
மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை, ஒஸ்லோவைச் சேர்ந்த 63 ருமேனியர்களுடன் பேருந்து ஓன்று ருமேனியா புறப்பட்டது. அந்த பேருந்து ருமேனியா சென்றடைந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இருப்பினும், தற்போழுது ஐரோப்பாவில் எல்லைகள் மூடப்பட்ட காரணத்தால், பேருந்து போக்குவரத்து இனி சாத்தியமில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இப்போது ஒஸ்லோவில் தங்கியுள்ள சுமார் 140 வதிவிடமற்ற ருமேனியர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்கள். இதனால், ஒஸ்லோ நகராட்சி, Kirkens bymisjon உடன் இணைந்து, ருமேனியாவுக்கு நேரடியாகச் செல்லும் தனி விமானத்தின் மூலம் ருமேனியர்களை அனுப்புவதே சிறந்த வழி என்று முடிவெடுத்துள்ளனர். முதலாவது விமானம் இன்று மார்ச் 18 அன்று ருமேனியாவுக்கு புறப்படுகின்றது.
மேலதிக தகவல் : VG