வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்! 

You are currently viewing வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்! 

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று வடகிழக்கில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டறிய பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.மட்டக்களப்பு மாவட்டத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பின் ஏற்பாட்டில் கவன ஈர்ப்பு பேரணியும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு காந்தி பூங்காவிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கலந்துகொண்ட கவன ஈர்ப்பு பேரணியானது ஆரம்பமாகி மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் ஊடாக தந்தை செல்வா சதுக்கம் வரையில் சென்றதுடன் அங்கு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன்,தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்றுமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புதுக்குடியிருப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலயங்களையும் காலை முதல் நண்பகல் 12 மணிவரை மூடி போராட்டத்துக்கு தமது பூரண ஆதரவை வழங்கியதாகம் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் நவநீதன் தெரிவித்தார்.இதற்கமைய இன்று காலை முதல் புதுக்குடியிருப்பு நகர்ப் பகுதியில் உள்ள வணிக நிலையங்களை மூடி வர்த்தகர்கள் பூரண ஆதரவு வழங்கிவருகின்றனர்.சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.அதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவ பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார் தினத்தையொட்டி இன்று காலை 10 மணியளவில் மன்னாரில் அமைதி வழி போராட்டம் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் மற்றும் மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப உறவுகளுடன் இணைந்து அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்றது.மன்னார் மாவட்டச் செயலகத்தின் முன் ஒன்று கூடிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பஜார் பகுதியூடாக மன்னார் பிரதான சுற்று வட்டம் வரை ஊர்வலமாக சென்றனர்.இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களை ஏந்தியவாறும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  1வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  2வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  3வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  4வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  5வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  6வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  7வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  8வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  9வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு- கிழக்கில் போராட்டம்!  10
பகிர்ந்துகொள்ள

Leave a Reply