வலுக்கும் உக்ரைன்-ரஷ்யா மோதல்!

You are currently viewing வலுக்கும் உக்ரைன்-ரஷ்யா மோதல்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் அதிகரித்து வருவதால், இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைனின் ஜபோரிஷியா மற்றும் டொனெட்ஸ்க் மாகாணங்களில் நடந்த சண்டையில் ஏற்பட்ட உயிரிழப்புகள், ரஷ்யா அதிக சேதத்தை சந்தித்த பஹ்முட் மோதலை விட இப்போது மிகவும் கடுமையானவை என பிரித்தானிய பாதுகாப்பு உளவுத்துறை கூறுகிறது.

தொடர்ந்து ஏவுகணை வீசி உக்ரைன் நகரங்களில் அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த ரஷ்யாவும் முயற்சித்து வருகிறது.

இதற்கிடையில், Kherson மாகாணத்தில் Dnipro ஆற்றின் மீது பாரிய அணை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த அணை கடந்த 6-ம் திகதி உடைந்தது.

ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளில் 29 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷ்யா நடத்திய வெடிப்பினால் அணை அழிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், அமைதிக்கான ஆப்பிரிக்க யூனியன் தலைவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்தன. தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்குச் சென்று சண்டையை முடிவுக்குக் கொண்டுவருமாறு வேண்டுகோள் விடுத்தார், ஆனால் பலனளிக்கவில்லை.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments