அமெரிக்காவின் “Washington” இலுள்ள “Tacoma” என்ற இடத்தில் காவல்துறை வாகனத்தை வழிமறித்த மக்கள்மீது அமெரிக்க காவல்துறை தனது வாகனத்தை ஏற்றி சென்றுள்ள சம்பவம் காணொளியாக பகிரப்பட்டுள்ளது.
சுமார் 100 பொதுமக்கள் ஒன்றுகூடி, சாலை வழியே வந்த காவல்துறை வாகனத்தை சூழ்ந்து கொண்டதாகவும், காவல்துறை வாகனத்தை கைகளால் பொதுமக்கள் தாக்கியதாகவும், அதனால் பயந்து போன குறித்த வாகனத்தை செலுத்தி சென்ற காவல்துறை அதிகாரி வாகனத்தை பின்புறமாக செலுத்த முனைந்தபோது பொதுமக்களில் ஒருவர்மீது வாகனம் எறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து, வழிமறித்த மக்கள் கூட்டத்தின்மீது வாகனத்தை ஏற்றிச்சென்ற குறித்த காவல்துறை அதிகாரி, சம்பவம் பற்றி காவல்துறைக்கு அறிவித்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தையடுத்து மறு அறிவித்தல்வரை காவல்துறை அதிகாரி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, என்ன காரணத்துக்காக குறித்த காவல்துறை வாகனம் பொதுமக்களால் வழிமறிக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
காணொளி இணைப்பு: