வவுனியா பழைய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெளி பிரதேசங்களில் இருந்து வரும் சில பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதனால் அங்கு செல்லும் ஏனை பெண்களையம் வர்த்தக உரிமையாளர்களையம் இச்செயற்பாடு அதிகம் பாதித்துள்ளது இதனால் அங்கு வரும் ஆண்கள் சிலர் ஏயை பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களாக நினைத்து அவர்களிடம் தவறாக நடந்துகொள்ளும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றது.
நகரின் பிரதான பகுதியில் இடம்பெற்று வரும் பாலியல் தொழிலினை கட்டுப்படுத்த காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா நகரசபை உறுப்பினர்; பி.ஜானுஜன் எழுத்து மூல கோரிக்கையினை அனுப்பிவைத்துள்ளார்.