முல்லைத்தீவு மாவட்டத்தில் 233 பட்டதாரி பயிலுனர்களுக்கு ஆயுதப்பயிற்சி!

You are currently viewing முல்லைத்தீவு மாவட்டத்தில் 233 பட்டதாரி பயிலுனர்களுக்கு ஆயுதப்பயிற்சி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 233 பட்டதாரி பயிலுனர்களுக்கு ஆயுதப்பயிற்சி உள்ளிட்ட துறைகளில் பயிற்சி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நியமனம் வழங்கப்பட்டுள்ளன பட்டதாரி பயிலுனர்களிற்கு பிரத்தியேக துறைகளில் பயிற்சி வழங்குவது தொடர்பாக பயிற்சிக்குப் பொறுப்பான பாதுகாப்புப் பிரிவினருடனான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை கடமைக்காக இணைக்கப்பட்ட 233 பயிலுனர்களில் 216 பயிலுனர்கள் குறித்த பிரதேச செயலகங்களில் கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு வங்கிகள் மற்றும் நிறுவனங்களில் உள்வாங்கி பயிற்சி அளித்தல் தொடர்பான விடயங்கள் இக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளன.

கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட செயலாளர் க.கனகேஸ்வரன், பயிற்சிகளுக்குப் பொறுப்பான இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பயிற்சி அளிக்கப்படவுள்ள நிறுவன முகாமையாளர்கள் என பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி புதிதாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற பட்டதாரிகளுக்கான பயிற்சிவகுப்புக்கள் படைமுகாம் ஒன்றில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதப்பயிற்சி உள்ளிட்ட 5 வகையான பயிற்சிகள் ஒவ்வொன்றும் 21 நாட்கள் என்றவரையறையில் 105 நாட்கள் படையினரின் கட்டுப்பாட்டில் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள படையினரின் பயிற்சி முகாம் ஒன்றில் இந்த பயிற்சி வகுப்புக்கள் நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது…..see more

பகிர்ந்துகொள்ள