வவுனியாவில் பெண்ணால் பெண்ணுக்கு கத்திக்குத்து!

You are currently viewing வவுனியாவில் பெண்ணால் பெண்ணுக்கு கத்திக்குத்து!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த விடயத்தை வவுனியா சிறீலங்கா காவற்துறை காவல் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பண்டாரிகுளம் முனியப்பர் கோயில் வீதியில் உள்ள அடுக்குமாடி வளவுக்குள் அமைந்துள்ள கடையில் இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

கத்திவெட்டுச் சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர், வவுனியா சிறீலங்கா காவற்துறை காவல் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாட்டை முன்வைத்திருந்தார்.

இதையடுத்து, வவுனியா தலைமை காவல் நிலையப் பொறுப்பதிகாரி பீ.எஸ். வீரரத்ன வழிகாட்டலில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், வவுனியா காவல் நிலைய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி இலங்கசிங்க தலைமையில் காவல் சார்ஜன்டுகளான திஸாநாயக்க (37348), ரேவத (40878) மற்றும் காவல்துறை கொன்ஸ்தாபிள்களான நவகீதன் (98098) போச உள்ளடங்கிய சிறீலங்கா காவற்துறை காவல்துறை குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதையடுத்து, துரிதமாகச் செயல்பட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண், கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பரவுத் தொழிலாளியாக வேலை செய்து வந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 64 வயதுடைய பெண்ணும் அதே குடியிருப்பில் வாடகைக்குத் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.குறித்த முரண்பாடு காரணமாக, குடியிருப்பின் உரிமையாளர் சந்தேகநபரான பெண்ணை வேலையிலிருந்து நீக்கியுள்ளார்.

இம்முரண்பாடு காரணமாகவே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply