வவுனியாவில் போராட்டத்துக்கு தயாராகும் முன்னணி!

You are currently viewing வவுனியாவில் போராட்டத்துக்கு தயாராகும் முன்னணி!

சமஷ்டி தீர்வை முன்னிறுத்தி மக்களுக்கான விழிப்புணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வவுனியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் மக்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

வவுனியா கனகராயன்குளத்தில் அமைந்துள்ள பிரத்தியோக இடத்தில் குறித்த மக்கள் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன் போது கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

ஒற்றையாட்சிக்குள் 13ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதன் ஊடாக எமது அரசியலை முடக்கக் கூடாது என தெரிவித்தும், தமிழ் தேசம் அங்கீகரிக்கப்படுகின்ற, தமிழ் தேசத்தின் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கப்படுகின்ற சமஸ்டி தீர்வே எமக்கு தேவை என்ற கோட்பாட்டை முன் வைத்து மக்களிற்கான விழிப்புணர்விற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் இதனை முன்னெடுக்கவுள்ளோம் என்று தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply