நேற்றுமுன்தினம்மாலை வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது ஈபிடிபி அமைப்பை சேர்ந்த ஈபிடிபி கட்சியின் வவுனியா நகர வட்டார கிளை உறுப்பினரும் முன்னாள் பொதுச் சுகாதார பரிசோதகருமான கிரிதரன் தலமையிலான குழுவினர் மது போதையில் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
நேற்றைய தினம் மாலை வாகனம் ஒன்றில் ஈபிடிபி இளைஞர்களுடன் நிறை வெறியில் குறித்த வீட்டுக்கு வருகை தந்த கிரிதரன்(கிரி) அங்கிருந்த இரு வயோதிபர்களை அவ் வீட்டை விட்டு வெளியில் செல்லுமாறும் இது கட்சி தலைமை பீடத்தின் உத்தரவு எனவும் வெளியேறாவிட்டால் உங்கள் இருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என கடும் தொணியில் எச்சரித்துள்ளார்.
குறித்த வீட்டு உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியேற மறுத்தநிலையில் கிரிதரன் தலமையிலான ஈபிடிபி இளைஞர்கள் அவ் வீட்டின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் ஈபிடிபி கட்சியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான குலசிங்கம் திலீபன் அவர்களிடம் எமது செய்திப் பிரிவு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பினை நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அண்மை காலமாக வவுனியாவில் ஈபிடிபி கட்சியினரினரால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதுடன் இவ் விடயங்கள் குறித்தும் வவுனியா மாவட்டத்தில் ஈபிடிபியினரின் செயற்பாடு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் மௌனம்காக்கும் செயற்படானது வவுனியாவில் நடைபெறும் அராஜகங்களுக்கு அமைச்சரும் துணைபோகின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக வவுனியா மாவட்ட சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.