திருகோணமலை கப்பல்த் துறையில் சிங்கள இனவாதக் குண்டர்களால் இனவெறி கொண்டு தாக்கிச் சேதமாக்கப் பட்ட தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் சுமந்த ஊர்திப் பவனி தற்போது வவுனியாவை வந்தடைந்து நிலைகொண்டுள்ளது.
நேற்றுப் பின்னிரவு வவுனியாவை வந்தடைந்த ஊர்திப் பவனியானது இன்று காலை முன் கூட்டிய நாள் ( நேர) அட்டவணைப் படி வவுனியாவை வலம் வரவுள்ளது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இன்றையை ஊர்திப் பவனியும் வழமை போன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா-கஜேந்திரன்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் மூத்த சட்டத்தரணிமான நடராஜர்-காண்டீபன் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் முன்னெடுத்துச் செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று ( 17.09.2023) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை கப்பல்த் துறையில் வைத்து தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிப் பயனித்த ஊர்திப் பவனி மீது சிங்கள இனவாதக் குண்டர்களால் நடாத்தப் பட்ட மிகமோசமான வன்முறைத் தாக்குதலின்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா-கஜேந்திரன், மற்றும் மூத்த சட்டத்தரணி நடராஜர் காண்டீபன், ஆகியோரும் சிங்களக் குண்டர்களால் கொலைவெறி கொண்டு தாக்கப்பட்டிருந்தனர் என்பது அனைவரும் அறிந்ததே.