வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூத்த ஊடகவியலாளர் மாமனிதர் தராக்கி சிவராம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..

இன்று நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் பலரும் கலந்து கொண்டு ஊடக துறைக்காக தம் இன்னுயிரை நீத்த ஊடகவியலாளர்களுக்கு தமது அஞ்சலியினை செலுத்தினர்.
ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.










