வவுனியா மாவட்ட செயலகம் முற்றுகை!

You are currently viewing வவுனியா மாவட்ட செயலகம் முற்றுகை!

சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி மாவட்ட செயலகத்திற்கு அதிகாரிகளை சந்திக்க வருவதனை அறிந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூட முற்பட்டனர்.

எனினும் அவர்களை குறித்த பகுதிக்கு செல்ல விடாது பொலிஸார் தடுத்திருந்தனர். இதையடுத்து அங்கு ஒன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அவ்விடத்திலேயே நீதிகேட்டு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து பொலிஸார் பேருந்தொன்றை போராட்டக்காரர்களுக்கு முன்புறமாக நிறுத்தி ஜனாதிபதிக்கு போராட்டம் இடம்பெறுவது தெரியாதவாறு தடுத்தனர்.

இதன்போது சிறீலங்கா காவற்துறையினருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு சிறீலங்கா காவற்துறையினரை தள்ளியவாறு போராட்டகாரகள் முன்னோக்கி செல்ல முற்பட்ட போதிலும் அது சாத்தியமின்றி போனது.

இந்த நிலையில் ஜனாதிபதி மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேறியதும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை மாவட்ட செயலகத்தின் நுழைவாயில் சென்றடைய சிறீலங்கா காவற்துறையினர் அனுமதித்தனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஓன்றிணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் மாவட்ட செயலகத்தை வந்தடைந்த நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

1 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments