வாராந்தம் 200 மில்லியன் குரோனார்கள் நட்டத்தை சந்திக்கும் ஒஸ்லோ பொதுப்போக்குவரத்து! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing வாராந்தம் 200 மில்லியன் குரோனார்கள் நட்டத்தை சந்திக்கும் ஒஸ்லோ பொதுப்போக்குவரத்து! “கொரோனா” அதிர்வுகள்!!

நோர்வேயின் மிகப்பெரிய நிறுவனமும், தலைநகர் ஒஸ்லோவின் மிகப்பெரிய பொதுப்போக்குவரத்து நிறுவனமுமான “Ruter” நிறுவனம், வாராந்தம் சுமார் 200 மில்லியன் நோர்வே குறோணர்கள் வரை நட்டமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா” பரவலின் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையாலும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளாலும் மக்களின் போக்குவரத்துக்கள் கணிசமாக குறைவடைந்துள்ள நிலையில், மேற்படி நிறுவனம் நாளாந்தம் நட்டத்தை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில், குறிப்பாக தலைநகர் ஒஸ்லோவில் மிக இறுக்கமான கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகளின் கீழ் ஒஸ்லோ பொதுப்போக்குவரத்தும் வருவதால், தனது நாளாந்த நெரிசல் நேரத்துக்கான விசேட சேவைகளை மட்டும் நிறுத்தியிருக்கும் மேற்படி நிறுவனம், தனது வழமையான பேரூந்து, நிலக்கீழ் தொடரூந்து மற்றும் கப்பல் சேவைகளை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிறுவனத்தின் வருட வருமானத்தின் பெரும்பகுதி பயணச்சீட்டு விற்பனையினாலேயே ஈட்டப்படுகிறது என் தெரிவித்திருக்கும் நிறுவனத்தின் அதிகாரியான “Olov Grøtting”, வாராந்தம் தமக்கேற்படும் நட்டத்தை ஈடுகாட்டும் விதமாக நாடாளுமன்றம் விரைந்து நிவாரண நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பொதுப்போக்குவரத்து சேவைகளில் கணிசமானளவு குறைப்புக்களை செய்யவேண்டிய கட்டாயநிலை ஏற்படுமெனவும் கவலை தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள