மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அடையாளம் தெரியாத இரு ஆண்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றைநாள் (7.5.2026) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு தலைமையக சிறீலங்கா காவற்துறை பிரிவிலுள்ள சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இரு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கிய நிலையில் இருப்பதை சம்பவ தினமான இன்று மாலை 5.00 மணிக்கு கண்ட அந்தப் பகுதி மக்கள் சிறீலங்கா காவற்துறையினருக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றும் தடயவியல் பிரிவு சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வரவழைக்கப்பட்டு நீரில் மூழ்கி இருக்கும் இரு ஆண்களது சடலங்களை மீட்டனர்.
நீதிமன்ற அனுமதியை பெற்று சடலங்களை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.






