பிரித்தானியா அரசாங்கம் ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இதன்படி டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா, திமோர் – லெஸ்தே மற்றும் வாநுவாட்டு ஆகிய ஐந்து நாடுகளுக்கு இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஐந்து நாடுகளின் குடிமக்கள் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்தி வருகின்றமையினால் இந்த நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.