விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தனியார் விண்கலம்!

  • Post author:
You are currently viewing விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது தனியார் விண்கலம்!

நாசா விஞ்ஞானிகளை சுமந்து செல்லும் SpaceX நிறுவனத்தின் விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

எலென் மாஸ்கின் (Elon Musk), SpaceX நிறுவனம் தயாரித்த விண்கலம் மூலம் நாசா விஞ்ஞானிகளை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டபடி, கென்னடி விண்வெளி மையத்திலிருந்து (Kennedy Space Center) SpaceX நிறுவனத்தின் விண்கலம் மத்திய ஐரோப்பிய நேரப்படி நேற்று இரவு 21.22 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

SpaceX, கடந்த புதன்கிழமை (27.05) ஏவப்படவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக பதினேழு நிமிடங்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில் அது ரத்து செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்தி:-
https://news.tamilmurasam.com/மோசமான-வானிலை-காரணமாக-spacex-வி/

SpaceX வளர்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது. பல தோல்வியுற்ற முயற்சிகள் மற்றும் வெடிப்புகளுக்குப் பின்னர் கடந்த மார்ச் 2017 இல் முதல் முறையாக, அவர்கள் ஒரு காவி விண்கலத்தை தானாகவே பூமியில் குறித்த இடத்திற்கு திரும்ப பெறமுடிந்தது. அப்போதிருந்து, அவர்கள் செயற்கைக்கோள்களை விண்வெளியில் கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால், அவர்களின் திட்டம் எப்போதும் மக்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதாகத்தான் இருந்துள்ளது. இருப்பினும், எலோன் மஸ்க்கின் இறுதி இலக்கு விண்வெளி நிலையம் அல்ல, அவரது இலக்கு செவ்வாய்க் கிரகமே. 2016 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க்கின் கூறுகையில், 2024 க்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் SpaceX விண்கல ஏவலின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள