அனைத்து பயணிகள் விமானங்களும் கப்பல்களும் நாட்டிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் மாற்றம் ஏற்படும் வரை இந்தத் தீர்மானத்தை தளர்த்த முடியாது என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, தென் கொரியா , இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து நாட்டிற்கு பயணிகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு சிறீலங்கா அரசாங்கம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்குமென சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் H.M.C. நிமல்ஶ்ரீ தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.