விமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில், இணைய வழியூடாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, அழகான பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹங்குரன்கெத்த பிரதேசத்தைச் சேர்ந்த, நீர்ப்பாசன வடிகாலமைப்பு சபையில் பணிபுரிகின்ற ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றப்பபுலனாய்வுத் திணைக்களத்தின், கணனி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லகீ ரன்தெணியவிடம், சம்பவத்திற்குள்ளான மாத்தளை மற்றும் கண்டி பிரதேசங்களைச் சேர்ந்த இரு யுவதிகள் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கமைய மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபருடன், இந்த மோசடிக்கு பயன்படுத்திய நான்கு கையடக்கத் தொலைபேசிகள், 13 சிம் அட்டைகள் மற்றும் ஒரு கணனியும், கண்டிஇ கணனி மோசடி விசாரணைப் பிரிவின் நிலைய அதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சதுரி திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கணனியில், இருபதுக்கும் மேற்பட்ட இளம் பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள் காணப்பட்டுள்ளன.
குறித்த சந்தேகநபர், பெண் ஒருவர் போல் நடித்து, ´பெண்களின் பிரச்சினைகள்´ என்ற பெயரில் சுமார் இரண்டு வருடங்களாக முகப்புத்தப் பக்கம் ஒன்றின் ஊடாக, இளம் பெண்களுக்கான அழகு தொடர்பான ஆலோசணைகள், தொழில்வாய்ப்புக்கள் மற்றும் நடிப்பதற்கான வாய்ப்புக்கள் வழங்கும் குழுக்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், விமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்புஎன்று குறிப்பிட்டு கூறி குறித்த முகப் புத்தகக் கணக்கில் இளம் பெண் ஒருவரின், பெயர் மற்றும் தொலைபேசி இலக்கத்தையும் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், தகைமைகளை பரிசீலிப்பதற்கு நிறுவனத் தலைவரைத் தொடர்புகொள்ளுமாறு, வேரொரு தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் தொலைபேசி இலக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தின் ஊடாக குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி, நிறுவன தலைவராக, சந்தேக நபரால், அடிப்படை தகைமைகளை பூர்த்தி செய்துள்ளீர் என்று கூறி, விரல்கள், நகங்கள், கால்கள், முடி மற்றும் முகம் ஆகியவற்றின் தனித்தனி புகைப்படங்களை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு,இதுதொடர்பான அனைத்து விடயங்களும் குறுந்தகவல்; மூலம் இடம்பெற்றுள்ளன.
இறுதியாக, உடலில் தழும்புகள் உள்ளதா என்று பார்ப்பதற்கும், உடலின் புகைப்படங்களைப் பார்ப்பதற்கும் தனது பெண் அதிகாரிக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறும் இறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவித்தலின் பின்னர் அநேகமான இளம் பெண்கள் விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் குறித்த பெண் அதிகாரியின் தொலைபேசி எண்ணுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்பின்னர் அந்த புகைப்படங்களில் உள்ள இளம் பெண்களை பயமுறுத்தி பாலியல் இலஞ்சம் பெற முயற்சித்துள்ளார்.
மேலும், நேர்முகப்பரீட்சையை மேற்கொள்ளும் பெண் அதிகாரி போன்று நடித்து, இந்த அனைத்து மோசடிகளையும் செய்தவர் குறித்த சந்தேகநபர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேகநபர் சுமார் இரண்டு வருடங்களாக முகநூல் ஊடாக இளம் பெண்களை ஏமாற்றி வந்துள்ளான். இவனிடம் சிக்கியுள்ள யுவதிகளை தேடி மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.