அதிகரிக்கும் கொரோனா இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு பர்மிங்காம் விமான நிலையத்தில் தற்காலிக பிணவறை ஒன்றை உருவாக்கி வருகின்றனர். குறித்த பிணவறையில் சுமார் 12,000 சடலங்கள் வரை சேகரித்து வைத்துக் கொள்ள முடியும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறித்த கவலை அதிகரித்து வருவதை அடுத்தே இந்த ஏற்பாடு என கூறப்படுகிறது.
விமான நிலையமானது பர்மிங்காமின் தேசிய கண்காட்சி மையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது, இது ஒரு தற்காலிக மருத்துவமனைக்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது. வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியானது இந்த வார தொடக்கத்தில் வைரஸ் பரவுவதற்கான முக்கிய பகுதியாக மாறிய பின்னர் இறப்புகளில் மற்றொரு அதிரடியான உயர்வைக் கண்டது.
சில நோயாளிகள் நோயறிதலுக்காக ஐந்து நாட்கள் வரை காத்திருப்பதால், இப்பகுதியில் பரிசோதனையில் கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதும் வெளிச்சத்துக்கு வந்தது. வெள்ளிக்கிழமை பதிவான மொத்த இறப்புக்களில் மிட்லாண்ட்ஸ் பகுதியில் மட்டும் 156 என பதிவாகியுள்ளது. பிரித்தானியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இறந்த ஐந்து பேரில் ஒருவர் மிட்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஆவார்