வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்! நியூயோர்க் ஆளுனர் வேண்டுகோள்!!

You are currently viewing வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம்! நியூயோர்க் ஆளுனர் வேண்டுகோள்!!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தின் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாமென அந்நகரத்தின் ஆளுனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருந்தகங்கள், அத்தியாவசிய அங்காடிகள் உள்ளிட்ட மிக முக்கியமான இடங்களில் பணிபுரிவோர் தவிர, ஏனையோர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டுமெனவும், இன்று ஞாயிற்றுக்கிழமை, 22.03.20 நள்ளிரவு முதல் இக்கட்டுப்பாடு நடைமுறைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகிறது.

நியூயோர்க் நகரத்தில் மாத்திரம் 7100 இற்கும் மேற்பட்டவர்கள் “கொரோனா” வைரசால் பீடிக்கப்பட்டிருப்பதாகவும், அமெரிக்காவிலேயே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது நியூயோர்க் நகரமே எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செய்தி மேம்பாடு:

இறுதியாக வந்திருக்கும் தகவல்களின்படி, நியூயோர்க்கில் இதுவரை 15.000 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள