முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தின் பிரிவிற்கு உட்பட்ட குமுழமுனை தாமரைக்கேணிப்பகுதியில் தனது வீட்டுக்காணியில் இருந்து எடுத்த துப்பாக்கி ரவைகளை படையினரிடம் ஒப்படைத்த குடும்பஸ்தர் ஒருவரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இச்சம்பவம் பற்றி தெரியவருகையில்..
தாமரைக்கேணி பகுதியில் வீட்டுக்காணியில் துப்பரவு செய்யும் போது கண்ணாடி போத்தல் ஒன்றிற்குள் ஒயில் ஊற்றப்பட்டு அதற்குள் 22 துப்பாக்கி ரவைகள் போட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட போத்தல் ஒன்றினை அருகில் உள்ள படையினரிடம் எடுத்து ஒப்படைத்துள்ளார்.
அருகில் உள்ள படையினர் இதனை முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளமையினை தொடர்ந்து குறித்த 14.08.2020 அன்று குறித்த நபரை முல்லைத்தீவு பொலீசார் கைதுசெய்துள்ளதுடன் மேலதிகமாக விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளதுடன்.
தனியார் காணியில் இருந்து கிடைக்கப்பெற்ற 22 துப்பாக்கி ரவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கைதுசெய்யப்பட்ட நபர் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி சட்ட நடவடிக்கை ஏடுக்கவுள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்