கிளிநொச்சி- முகமாலை பகுதியில் மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்ட இடத்தில் அகழ்வு பணிகள் இன்று நிறுத்தப்பட்டு யூன் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின்போது T-81 ரக துப்பாக்கிகள் 3, துப்பாக்கி ரவைகள் 75, கை குண்டுகள் 2, த.வி.பு ஞா 0164 இலக்க தகடு, சீருடை, 8 ரவை கூடுகள், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரனின் புகைப்படம் மற்றும் எலும்பு மிகுதிகளும் மீட்கப்பட்டிருக்கின்றது.
மீட்கப்பட்ட எலும்பு மிகுதிகள் ஒருவருடையது என கூறப்படுவதுடன், அது பெண்ணுடையது எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அகழ்வு பணிகள் யூன் மாதம் 2ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

