பல ஆண்டுகளுக்கு பின்னர் கிழக்கு ஆபிரிக்காவில் மிக மோசமான வெட்டுக்கிளி படையெடுப்பு பசியாலும், போரினால் பாதிக்கப்பட்ட தென் சூடானை அடைந்துள்ளது.
ஏற்கனவே 6 மில்லியன் மக்கள் சூடானில் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இரவு, கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்கனவே பல நாடுகளைத் தாக்கியுள்ள வெட்டுக்கிளிகள், தெற்கு சூடானின் எல்லையான எத்தியோப்பியா, கென்யா மற்றும் உகாண்டாவில் படையெடுத்துள்ளன என்று கூறப்படுகின்றது.