வெற்றிலைக்கேணியில் தொழிலுக்கு போனவர் மரணம்!

You are currently viewing வெற்றிலைக்கேணியில் தொழிலுக்கு போனவர் மரணம்!

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கடற்தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (23.10.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் எனும் 44 வயதுடைய குடும்பஸ்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

உடனடியாக இன்னொரு படகுமூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த கடற்தொழிலாளரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply