வெளிநாடொன்றில் பெண் ஊழியர்களை ஆடை இல்லாமல் கட்டாய சோதனைக்கு உட்படுத்திய சீஸ் நிறுவனம்!

You are currently viewing வெளிநாடொன்றில் பெண் ஊழியர்களை ஆடை இல்லாமல் கட்டாய சோதனைக்கு உட்படுத்திய சீஸ் நிறுவனம்!

கென்யாவில் பிரபல சீஸ் நிறுவனம் பெண் ஊழியர்களை வலுக்கட்டாயமாக ஆடைகளை அவிழ்க்க வற்புறுத்தியதுடன், மாதவிடாய் காலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை சோதிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

குறித்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மூவர் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவறான குப்பைத் தொட்டியில் பயன்படுத்திய சானிட்டரி நாப்கின் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த சீஸ் நிறுவனத்தின் பெண் மேலாளர் அனைத்து பெண் ஊழியர்களையும் ஒன்றாக கூடும்படி கூறியுள்ளார்.

இதனையடுத்து தவறிழைத்தவர்கள் உண்மையை ஒப்புக்கொள்ள அவர் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடையவே, அனைவரையும் ஆடைகளை அவிழ்க்க அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

தற்போது அந்த நிறுவனம் தொடர்புடைய மேலாளரை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளதுடன், விசாரணையை எதிர்கொள்ள கூறியுள்ளனர். அத்துடன் மூவர் பொலிஸ் விசாரணையை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.

திங்களன்று இரவு நடந்த இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், செனட்டர் ஒருவர் இது குறித்து தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் அந்த சீஸ் நிறுவனமும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளது. மேலும், தனிப்பட்ட விசாரணை ஒன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply