வெளிநாட்டவர் தவறவிட்ட பணத்தை கையளித்து பாராட்டை பெறும் பருத்தித்துறை பேருந்து காப்பாளர்!

You are currently viewing வெளிநாட்டவர் தவறவிட்ட பணத்தை கையளித்து பாராட்டை பெறும் பருத்தித்துறை பேருந்து காப்பாளர்!

வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் B.பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் இன்று ஈடுபட்டிருந்தார்.

குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட பாஸ்போர்ட், 120,840 இலங்கை ரூபாய் பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை நேற்றைய தினம்  திகதி சாலையில் ஒப்படைத்துள்ளார்.

அண்மை நாட்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் செய்திகள் வெளியாகி சிறீலங்காவின் உல்லாசத்துறைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பேருந்து காப்பாளரின் குறித்த செயல் பலராலும் பாராட்டப்படுகின்றது.

அத்துடன் இவர் 2021ம் ஆண்டு மற்றுமொரு பயணி ஒருவரால் தவற விடப்பட்ட இரண்டு லட்சத்து ஐம்பது ஓராயிரம் ரூபா பணம் மற்றும் எழுபதாயிரம் ரூபாய் பெறுமதியான போன் ஒன்றினையும் சாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments