வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரித்தானிய அரசாங்கம்!

You are currently viewing வெளிநாட்டு மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரித்தானிய அரசாங்கம்!

வெளிநாட்டு மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை பிரித்தானியாவுக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் தடுக்கப்படும் என அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் குறித்த விவகாரம் தொடர்பில் அறிவிப்பு வெளிவரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கான சம்பள வரம்பை 26,000 பவுண்டுகளில் இருந்து 33,000 பவுண்டுகள் என உயர்த்துவதற்கான உள்விவகார அமைச்சகத்தின் கோரிக்கைகளை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

இதனிடையே, சமீபத்திய தரவுகளின்படி நிகர புலம்பெயர்வு எண்ணிக்கை 1 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் ரிஷி சுனக், புலம்பெயர்வு எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகளை முன்னெடுக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நெருக்கடி அளித்து வருகின்றனர்.

மேலும், செவ்வாய் அல்லது புதன்கிழமை அமைச்சர்கள் குடியேற்ற தடையை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்து முதுநிலை மாணவர்களும் மற்றும் பல முதுகலை பட்டதாரிகளும் தங்கள் குடும்பத்தை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்படும்.

இருப்பினும், PHD மாணவர்களுக்கு இந்தத் தடை பொருந்தாது. அவர்களின் படிப்பு காலம் பொதுவாக 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்பதால் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்விவகார செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் மற்றும் ராபர்ட் ஜென்ரிக் ஆகியோரும் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பள வரம்பை உயர்த்த கோரிக்கை விடுத்தனர். ஆனால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, பிரித்தானியாவில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு 26,000 பவுண்டுகள் சம்பள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீப மாதங்களில் தங்கள் உறவினரின் மாணவர் விசாவில் பிரித்தானியாவிற்கு குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

2022ல் மட்டும் மாணவர்கள் 135,788 குடும்ப உறுப்பினர்களை பிரித்தானியாவுக்கு அழைத்து வந்துள்ளனர். இது 2019 ஆம் ஆண்டினை ஒப்பிடுகையில் 9 மடங்கு அதிகம் என்றே கூறுகின்றனர். கடந்த ஆண்டு, 59,053 நைஜீரிய மாணவர்கள் 60,923 உறவினர்களை அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments