வெள்ளத்தில் சிக்கிய பயணிகளை காப்பாற்றும் உலங்குவானூர்தி!

You are currently viewing வெள்ளத்தில் சிக்கிய பயணிகளை காப்பாற்றும் உலங்குவானூர்தி!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் பேருந்து சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பேருந்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக பெல் 212 ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

யாழில் இருந்து சென்ற பேருந்து பாரிய வெள்ளத்தில் சிக்கியது - மீட்கும் பணியில் ஹெலிகொப்டர் | Jaffna Bus Caught In Massive Floodi Puttalam

இதேவேளை குறித்த பேருந்தில் 70 பயணிகள் பயணித்ததாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply