வைத்வெத் அன்னைபூபதி வளாகத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பங்கெடுக்காத தலைமை நிர்வாகி!மக்கள் குரல்!

You are currently viewing வைத்வெத் அன்னைபூபதி வளாகத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பங்கெடுக்காத தலைமை நிர்வாகி!மக்கள் குரல்!

வணக்கம்!

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடங்களின் Veitvet வளாகத்தின் மேலதிக ஆண்டுக்கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

Veitvet வளாகத்திலும் எட்டாம் தர வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் பல்லாண்டுகளாகவே இழுபறி நிலை தொடர்ந்துவருவது அனைத்து பெற்றோரும் அறிந்ததே. மேற்படி வளாகத்தில் பயிலும் மாணவ / மாணவிகளின் நன்மை கருதி இவ்வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அன்னை பூபதி கலைக்கூடங்களின் தலைமை நிர்வாகியால் அதற்கு தொடர்ச்சியாக தடைகள் போடப்பட்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பெற்றோரின் தொடர் முயற்சியால் கடந்த வருட கோடைகால விடுமுறையை அடுத்து இவ்வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருந்தபோதும், வளாகம் ஆரம்பிப்பதற்கு முதல் நாள் வரை மௌனம் காத்த தலைமை நிர்வாகம், வளாக கல்விச்செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, இவ்வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாதெனவும், இவ்வளாகத்தில் இவ்வகுப்புக்களை ஆரம்பிப்பதில்லையென 2015 ஆம் ஆண்டிலேயே முடிவு எடுக்கப்பட்டிருந்ததை காரணமாகவும் கூறியிருந்தது.

ஏற்கெனவே 2014 ஆம் ஆண்டில் பெற்றோரின் பெரும்பான்மை ஆதரவோடு இவ்வாறு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டபோது, அந்நேரத்தில் அது தலைமை நிர்வாகத்துக்கும், வளாக நிர்வாகத்துக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதத்தில் நிர்வாகச்சிக்கல்களை உருவாக்கியிருந்தமையும் நினைவுகூரத்தக்கது. எனினும், வளாகத்தில் கல்விபயிலும் மாணவ / மாணவிகளின் தேவைக்கும், காலச்சூழ்நிலை மாற்றத்துக்கும் ஏற்ப, இவ்வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமென பெற்றோரால் ஒருமித்த குரலில் வேண்டுகோள் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வந்திருந்தது.

இது விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக, Veitvet வளாகத்துக்கு வரும்படி பலமுறை அன்னை தலைமை நிர்வாகிக்கு அழைப்புக்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்த அழைப்புக்களை நிராகரித்துவந்த தலைமை நிர்வாகி, வளாக மாணவ / மாணவிகளின் தேவைகளை உதாசீனம் செய்து வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பெற்றோர் மேற்கொண்ட கடும் முயற்சியின் விளைவாக, இன்று ஒழுங்கமைக்கப்பட்ட பெற்றோர் கூட்டத்துக்கு தலைமை நிர்வாகி வருவாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வராமல் தவிர்த்துக்கொண்டுள்ளதோடு தனது சார்பில், தனது உதவி நிர்வாகியையும், மற்றொரு நிர்வாக உறுப்பினரையுமே அனுப்பி வைத்திருந்தார். தலைமை நிர்வாகி நேரில் வந்து, பெற்றோருடன் சுமுகமாக உரையாடி தகுந்த தீர்வொன்றினை காணுவதை தவிர்த்து, வேண்டுமென்றே பெற்றோருக்கும் தனக்குமிடையிலான சிக்கல் நிலைமையை மென்மேலும் வளர்த்துக்கொள்ள முனையும் அவரது முறையற்ற செயற்பாடு பல பெற்றோர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டதோடு, கல்வி செயற்பாடுகள் தொடர்பில் எதுவித அக்கறையுமில்லாமல், வெறுமனே தனது அதிகார மமதையால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் பெற்றோர்கள் விசனமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைமை நிர்வாகி வேண்டுமென்றே வளாகத்துக்கு வராமல் தொடர்ந்தும் தவிர்த்து வருகின்றமை மீண்டும் இன்றைய தினமும் உறுதி செய்யப்பட்டமையை தொடர்ந்து, பெற்றோர்கள் அனைவரும் ஏகமனதாக தீர்மானங்களை இன்றைய கூட்டத்தில் எடுத்துள்ளார்கள்.

 

  • Veitvet வளாகத்தில் எட்டாம் தர வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாதென, வளாகத்தின் 2015 ஆம் ஆண்டின் ஆண்டுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவானது, தனியே ஒரு வளாகத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாக அமைவதாக கருதப்பட முடியுமென்பதால், மேற்படி முடிவு இனிமேல் செல்லாது என பெற்றோர் ஏகமனதாக முடிவெடுத்தனர்.

 

  • மாணவ / மாணவிகளின் வசதி கருதி, மேற்படி வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் சாதகமான முடிவொன்றை தலைமை நிர்வாகம் இரு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் எனவும், தவறின், எதிர்வரும் ஜனவரி மாதம் வளாகத்தின் ஆண்டுக்கூட்டம் பெற்றோரால் கூட்டப்பட்டு, அடுத்த கல்வியாண்டிலிருந்து இவ்வகுப்புக்கள் Veitvet வளாகத்தில் ஆரம்பிக்கப்படுவதை, பெற்றோர் தமது பெரும்பான்மை வாக்குகள் மூலம் உறுதி செய்து கொள்வார்கள் என முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

  • அன்னை தலைமை நிர்வாகியின் மாற்றம் தொடர்பான சர்ச்சை மற்றும் Rommen வளாகம் மீதான நம்பிக்கையின்மையால் அடுத்தடுத்து இரு பெற்றோர் கூட்டங்களில் தொடர்ச்சியாக Rommen நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை பெற்றோரின் ஏகமனதான ஆதரவோடு நிறைவேற்றப்பட்டமை உள்ளிட்ட விடயங்கள், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், வளாகங்களின் எதிர்கால செயற்பாடுகளுக்கும் உசிதமாக இருக்காது என்பதால், தலைமை நிர்வாகி உடனடியாக பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமென, தலைமை நிர்வாகியின் சார்பில் கூட்டத்துக்கு வந்திருந்த தலைமை நிர்வாக உறுப்பினர்களிடம் தீர்மானமாக பெற்றோரால் தெரிவிக்கப்பட்டது.

 

  • மேற்படி குழப்ப நிலைகளை தனது பதவியின் இருப்புக்கு சாதகமாக பயன்படுத்தும் நோக்கோடு, தலைமை நிர்வாகியே பல சமூக ஊடக குழுக்களை ஆரம்பித்து, அவற்றினூடாக அனாவசியமான மற்றும் பெற்றோர்களிடையே குழப்பநிலையை தக்கவைக்கும் விதத்திலான விடயங்களை வெளியிடுவதாக வளாகத்தின் அனைத்து பெற்றோரும் ஏகமனதாக சுட்டிக்காட்டியுள்ளதோடு, தான் ஏற்படுத்தியுள்ள சமூக ஊடகங்கள் வாயிலாக தனிமனித தாக்குதல்களை மேற்கொள்வதை தலைமை நிர்வாகி உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமெனவும் பெற்றோரால் அறிவுறுத்தப்பட்டது.

 

Rommen வளாக நிர்வாகத்தின் மீது தொடர்ச்சியாக இரு தடவைகள் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தார்மீகமாக காலாவதியாகியிருக்கும் நிர்வாகம், புதிய நிர்வாகமொன்றினை அமைக்கும் பொருட்டு, தானாகவே வளாகத்தின் மேலதிக ஆண்டுக்கூட்டத்தை கூட்டவேண்டிய நிலையில், வளாகம் அதை செய்யாமல் பின்னடித்து, வரலாற்றுத்தவறை செய்து வருவதற்கும் மத்தியில், பெற்றோர் அதற்கான முன்முயற்சிகளை பல தடைகளும் மத்தியில் மேற்கொண்டு வரும் நிலையில், Veitvet வளாக நிர்வாகம், பெற்றோரின் கருத்துக்கு மதிப்பளித்து, உடனடியாக மேலதிக ஆண்டுக்கூட்டத்தை இன்று கூட்டியமையானது பாராட்டுதலுக்குரியதும், Rommen வளாகம் உட்பட அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் ஏனைய 16 வளாகங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்வது பாராட்டுதலுக்குரியது.

வாய்மையே வெல்லும்!

வைத்வெத் அன்னைபூபதி வளாகத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பங்கெடுக்காத தலைமை நிர்வாகி!மக்கள் குரல்! 1

வைத்வெத் அன்னைபூபதி வளாகத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பங்கெடுக்காத தலைமை நிர்வாகி!மக்கள் குரல்! 2

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments