வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்!

  • Post author:
You are currently viewing வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்!

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் (Xi Jinping) இன்று திங்களன்று பெய்ஜிங்கில் சுகாதார வல்லுநர்களையும் மற்றும் வுஹானில் வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டார்.

டிசம்பர் பிற்பகுதியிலிருந்து அதாவது வுஹானில் வைரஸ் வெடித்ததில் இருந்து ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெரும்பாலும் பொது இடங்களில் தன்னை பகிரங்கப்படுத்துவதிலிருந்து விலகியே இருந்தார்.

இன்று திங்களன்று, அவர் பெய்ஜிங்கில் உள்ள டிட்டன் மருத்துவமனையில் முகமூடி மற்றும் மருத்துவர் ஆடையுடன் சுகாதார வல்லுநர்கள் மற்றும் வுஹாநில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் உரையாடினார்.

மருத்துவமனை வருகைக்குப் பின், ஜனாதிபதி ஜி ஒரு குடியிருப்பு பகுதிக்குச் சென்று தொற்றுநோய்க்கு எதிரான செயற்பாடுகள் குறித்து விசாரித்து அதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

ஹூபே மாகாணத்தின் தலைநகர் வுஹானில் வெடித்த புதிய நுரையீரல் வைரஸால் சீனாவில் 40,0000 க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இதுவரை, சீனாவில் 900 க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். (NTB)

பகிர்ந்துகொள்ள