சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் விளைவாக மேலும் மூன்று பேர் இன்று இரவு இறந்ததை தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வரவை கட்டுப்படுத்தவுள்ளது வடகொரியா.
இதுவரை இந்த வைரஸினால் 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் இந்த வைரஸ் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு பரவியுள்ளது.
இப்போழுது வடகொரியா தனது நாட்டில் தொற்றுநோயைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றும்,
தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கான தனது நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்படும் என்றும் சி.என்.என்(CNN) கூறுகின்றது.
வெளி உலகத்திலிருந்து வடகொரியா பெருமளவில் தனிமைப்பட்டிருந்தாலும், சுற்றுலாத்துறையில் வடகொரியாவிற்கு வருபவர்களில் பெரும்பாலோர் சீனர்களே.
சி.என்.என்(CNN) செய்திகளின்படி, ஒவ்வொரு ஆண்டும் எத்தனை சுற்றுலாப் பயணிகள் வடகொரியாவிற்கு வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சீன அரசு செய்தித்தாளான சீனாவின் குளோபல் டைம்ஸ் கருத்துப்படி, கடந்த ஆண்டு சுமார் 100,000 சுற்றுலாப் பயணிகள் வடகொரியாவிற்கு விஜயம் செய்தனர். அவர்களில் 80 விழுக்காடு சீனர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.